திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1151 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே – புறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று – உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் – வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று) 4 | மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே –3-1-4 | பதவுரை Show / Hideஅவன் குலம் மகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம், Avan Kulam Makarku In Arul Koduthavan Idam - அவளது சிறந்த மகனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு நல்ல க்ருபை பண்ணின பெருமான் வாழுமிடமாவது; (- (திரு அயிந்திரபுரம்-.)) மிடைந்து, Midaindhu - ஒன்றோடொன்று நெருங்கி சாறுகொண்ட, Saarukondha - ரஸமயமா யிருக்கிற மெல் கரும்பு இள கழை, Mel Karumbu Ila Kazhai - மெல்லிய கரும்பின் இளந்தடிகளானவை தகை விசும்பு உற, Thakai Visumbu Ura - (தங்களை விம்மி வளரவொட்டாமல்) தடை செய்கின்ற ஆகாசத்தைக் கிட்டி வளர்ந்திருப்பதனால் மணி நீழல், Mani Neezhal - அழகிய நிழலையுடையதும் சேறுகொண்ட தண் பழனமது எழில் திகழ், Searukondha Than Pazhanamathu Ezhil Thigazh - (கருப்பஞ் சாற்று வெள்ளத்தினால்) சேற்றையுடைத்தாய் குளிர்ந்த நீர்நிலங்களின் அழகு விளங்கப் பெற்றதுமான |