திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1152 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம் அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு – இடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக உபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம்) 5 | ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே –3-1-5 | பதவுரை Show / Hideமாவலி வேள்வியில் சென்று இரந்து, Maavali Velviyil Sendru Irandhu - மஹாபலியின் யாக பூமியிலே (மாணியுருவாகிச்) சென்று (மூவடிமண்) யாசித்துப் பெற்று (- (திரு அயிந்திபுரம்-.)) ஆங்கு, Aangu - அவ்விடத்திலேயே அகல் இடம் அளந்து, Akal Idam Alandhu - பரந்த உலகம் முழுவதையும் அளந்து கொணடவனும் ஆயர் பூங்கொடிக்கு, Aayar Poongodikku - அழகிய இடைப்பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்காக இனம் விடை, Inam Vidai - ஓரினமான ஏழு ரிஷபங்களையும் பொருதவன் இடம், Poruthavan Idam - போர்செய்து முடித்த பெருமானுறையும் இடமாவது; குரங்கு இனம், Kurangu Inam - குரங்குகளின் கூட்டமானது, பொன்மலர்திகழ், Ponmalar Thigazh - பொன்னிறமான மலர்கள் விளங்காநின்ற வேங்கை கோங்கு செண்பகம் கொம்பினில், Vengai Kongu Senbagam Kombinil - வேங்கைமரம், கோங்குமரம், செண்பக மரம் என்பனவற்றின் கொம்புகளிலே குதிகொடு இரைத்து ஓடி, Kudikodu Iraithu Odi - குதித்தல் செய்துகொண்டும் பெரிய ஆரவாரங்கள் செய்துகொண்டும் இங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தேன் கலந்த தண்பலங்கனி நுகரிதரு, Then Kalanda Thanpalangani Nukaritharu - தேன் மிக்க சிறந்த பலாப்பழங்களை உட்கொள்ளப்பெற்ற |