திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1153 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய் வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே முன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து வர்திக்கலாம் தேசம் ஆயிற்று) 6 | கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும்
கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும்
வானுலாவிய மதி தவழ் மால்வரை மா மதிள் புடை சூழ
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே –3-1-6 | பதவுரை Show / Hideகூன் உலாவிய மடந்தைதன் மடந்தைகள் கொடும் சொலின், Koon Ulaaviyam Madandhaithan Madandaigal Kodum Solin - கூனேறின மந்தரையென்னும் ஸ்திரியினுடைய கொடிய பேச்சுக்காக திறத்து (- (திரு அயிந்திபுரம்-;)) இளகொடியோடும் கான் உலாவிய, Ilakodiyodum Kaan Ulaaviyam - இளங்ககொடிபோன்ற பிராட்டியோடகூட காட்டுக்கொழுந்தருளின கருமுகில் திரு நிறத்தவன் இடம், Karumugil Thiru Niraththavan Idam - காளமேகம் போன்ற வடிவையுடைய பெருமானுக்கு இடமாவது; கவின் ஆரும், Kavin Aarum - அழகு நிரம்பிய வான் உலாவிய மதிதவழ் மால் வரை மாமதிள் புடை சூழ, Vaan Ulaaviyam Mathithavazhal Maal Varai Mamathil Pudai Soozh - ஆகாசத்தில் சஞ்சரிக்கின்ற சந்திரன் தவழப்பெற்ற பெரிய மலையும் பெரிய மதிளும் பக்கங்களில் சூழ்ந்திருக்கப்பெற்றதும் தேன் உலாவிய செழு பொழில் தழுவிய, Then Ulaaviyam Sezhu Pozhil Thazhuviyam - வண்டுகள் ஸஞ்சரிக்கின்ற அழகிய சோலைகளால் சூழப்பட்டதுமான |