திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1155 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று – இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே நோக்குகைக்காக வந்து நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று) 8 | விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார்
வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –3-1-8 | பதவுரை Show / Hideவிரை கமழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில் இறுத்து, Virai Kamazhnthamen Karunguzhal Kaaranam Vil Iruththu - பரிமளம் வீசுகின்ற மெல்லிய கறுத்த கூந்தலையுடையளான பிராட்டிக்காக வில்லை முறித்தவனும், (- (திரு அயிந்திரபுரம்-.)) அடல் மழைக்கு நிறை கலங்கிட, Adal Mazhaikku Nirai Kalangida - அஸஹ்யமான பெருமழை வந்தபோது ஆநிரைகள் பரிதபித்து நிற்க வரை குடை எடுத்தவன், Varai Kudai Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துக் காத்தவன் நிலவிய இடம், Nilaviyam Idam - மகிழ்ந்து உறையும் இடமாவது; தடம் ஆர்வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு, Tadam Aarvarai Valam Thigazh Madakari Maruppodu - தடாகங்கள் நிறைந்த மலைக்கு அழகுசெய்து விளங்குகின்ற மதயானைகளையுடைய மருப்பொடு, Maruppodu - தந்தங்களையும் திரை உந்தி கொணர்ந்து அணை, Thirai Undhi Konarnthu Anai - அலைகளினாலே தள்ளிக் கொண்டுவந்து சேருகிற செழு நதி, Sezhu Nathi - அழகிய ஆறு வயல் புகு, Vayal Pugu - கழனிகளில் பாயப்பெற்ற |