திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1158 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1158பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே) 1
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர் கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய் தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே –3-2-1
பதவுரை Show / Hide
இமையோர் உலகு தமதுஆ ஆள கிற்பீர், Imaiyor Ulagu Thamathu Aala Kirbeer - பரமபதத்தை ஸ்வாதீநமாக ஆளவேண்டி யிருக்குமவர்களே!, (- (பின்னை என்ன செய்யவேண்டுமென்னில்;))
ஊன் வாட உண்ணாது, Oon Vaada Unnaadhu - மாம்ஸம் வற்றி யுலரும்படி உபவாஸங்களிலிருந்து
உயிர்காவலிட்டு, Uyirkavalittu - பிராணன் மாத்திரம் போகாதபடியாக (நீரையும் காற்றையும் உட்கொண்டு பிராணனைக்) காப்பாற்றி
உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து, Udalil Priya Pulam Aindhum Nondhu - சரீரத்தை விட்டுப் போகாத பஞ்சேந்திரியங்களும் நோவ
தாம் வாடவாட, Thaam Vaadavaada - தாங்கள் மேன்மேலும் வாட்டமடையும்படி
தவம் செய்ய வேண்டா, Thavam Seyya Venda - தபஸ்ஸூ பண்ணவேண்டா
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட, Kaan Aada Manjai Kanam Aada - சோலைகள் அசையும்படியாக
மஞ்சை கணம் ஆட, Manjai Kanam Aada - மயில்களின் கூட்டங்கள் ஆடவும்
மாடே, Maade - பக்கத்திலே
தேன், Then - வண்டுகளானவை
கயல் ஆடுநீர்கால் பழனம் படைபோய் ஆட, Kayal Aaduneerkal Pazhanam Padaipoy Aada - ஜலஸம்ருத்தியையுடைய வாய்க்கால்களை யுடைத்தான நீர்நிலங்களினருகே போய் (மதுவில்நசையாலே) மேலே பறக்கவும்
மாடம் கொடி ஆடு, Maadam Kodi Aadu - மாடங்களிலுள்ள கொடிகள் அசையாநிற்கவும் பெற்ற
தில்லை திருசித்ர கூடம், Thillai Thiruchithra Koodam - தில்லைத் திருச்சித்திரகூடமென்னுந் திருப்பதியை
சென்று சேர்மின்கள், Sendru Serminkal - சென்று சேருங்கள்.