திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1159 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1159பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர் வாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும் ஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை) 2
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-2
பதவுரை Show / Hide
திரு மார்பினை சிந்தையுள் வைத்தும் என்பீர், Thiru Maarbinai Sindhaiyul Vaiththum Enbeer - பிராட்டியைத் திருமார்பிற் கொண்ட பெருமானை நெஞ்சில் தரிப்போமென்றிருக்கிற பக்தர்களே!, (- (பிள்ளை என்ன செய்யவேண்டுமென்னில்) (தில்லை திருசித்ரகூடம் சென்று சேர்மின்கள்-.))
காயோடு நீடு கனி உண்டு வீசு கடுங் கால் நுகரிந்து, Kaayodu Needu Kani Undu Veesu Kadung Kaal Nukarinthu - இளங்காய்களையும் நெடுநாளுலர்ந்த பழங்களையும் புஜித்தும் வீசுகிற உஷ்ணமான காற்றை உட்கொண்டும்
நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று, Nedungkaalam Aindhu Theeyoodu Nindru - நெடுநாள் வரையில் பஞ்சாக்நி மத்தியில் நின்றுகொண்டு
தவம் செய்ய வேண்டா, Thavam Seyya Venda - தபஸ்ஸூ பண்ணவேண்டர்
வாய் ஓது வேதம் மலிகின்ற, Vaai Othu Vedham Malikindra - வாயாலே ஓதப்பட்டு வருகிற வேதங்கள் குறைவற்றிருக்கிற
தொல்சீர்மறையாளர் நாளும் முறையால் வளர்த்த, Tholseermaraiyalar Naalum Muraiyala Valarttha - இயற்கையான நற்குணங்களமைந்த  வைதிகரிகள் நாள்தோறும் கிரமமாக அநுஷ்டித்த
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு, Thee Onga Onga Pugazh Ongu - அந்நிகார்யங்கள் வளர வளர, (அதனாலே) கீர்த்தி வளரப் பெற்ற