திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1161 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1161பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின ஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை) 4
அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்ன கிற்பீர் கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல் திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-4
பதவுரை Show / Hide
அன்று அரு மா நிலம் அளப்பான் குறள் ஆய், Anru Aru Ma Nilam Alappan Kural Aayi - முன் பொரு காலத்தில், ஒருவராலும் அளக்கமுடியாத பெரிய பூமியை அளப்பதற்காக வாமந ரூபியாகி (- (தில்லை…சேர்மின்கள்-.))
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி, Avunan Peru Velviyan Senru Irandha Peruman Thiru Namam Pithattri - மாவலியென்னு மசுரனுடைய பெரிய யாகபூமியிற் சென்று (மூவடிமண்) யாசித்த பெருமானுடைய திருநாமங்களை வாயராச் சொல்லி
நும்தம் பிறவி துயர்நீங்குதும் என்ன கிற்பீர், Numtham Piravi Thuyarningudum Enna Kirpir - உங்களுடைய ஸம்ஸார துக்கங்களைப் போக்கிக் கொள்ள நினைத்திருக்குமன்பர்களே!,
கரு மா கடலுள், Karuma Katalul - கறுத்துப் பெரிய கடலிலே
கவை நா அரவின் அணை பள்ளியின்மேல், Kavai Na Aravin Anai Palliyinmel - இரட்டை நாவையுடைய திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையின் மேல்
உவந்து கிடந்தான் திருமால், Uvandhu Kitandhan Thirumal - மகிழ்ந்து சயனித்தருள்பவனான திருமால்
திரு மங்கையொடு ஆடு, Thiru Mankaiyodu Adu - பிராட்டியோடு நித்பவாஸம் பண்ணப்பெற்ற