திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1164 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1164பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய மிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை ஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே) 7
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் கௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-7
பதவுரை Show / Hide
மௌவல் குழல் ஆய்ச்சி மெல் தோள் நயந்து, Mauval Kuzhal Aaychchi Mel Thol Nayandhu - முல்லைப்பூவைக் கூர்தலிலே அணிந்துள்ள நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய தோள்களை விரும்பி யணைந்தவனும், (- (தில்லை சேர்மின்கள்-.))
மகரம் சுழல சுழல் நீர்பயந்த தெய்வம் திரு மா மலர்மங்கை தங்கு திரு மார்பினை, Makarum Suzhal Suzhal Neerpayandha Deivam Thiru Maa Malarmangai Thangu Thiru Maarbinai - மீன்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடலினால் பிரஸவிக்கப்பட்ட அழகிய பெரிய பிராட்டியர்நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்பை யுடையவனுமான பெருமானை
சிந்தையுள் வைத்தும் என்பீர், Sindhaiyul Vaiththum Enbeer - நெஞ்சில் வைக்க வேண்டியிருக்குமன்பர்களே!,
கௌவை களிற்றின் மருப்பும், Kauvai Kalittrin Maruppum - (சிங்கத்தோடே பிணங்கிப் பிளிறுகிற யானையின் கொம்புகளையும்
நெருப்பில் கமழ் சந்தும, Neruppil Kamazh Chandhum - மலையிலுள்ள மணங்கமழ்கின்ற சந்தன மரங்களையும்
உந்தி, Undhi - தள்ளிக்கொண்டு
நிவா வலங்கொள் தெய்வம் புனல் சூழ்ந்து அழகயாய, Nivaa Valangol Deivam Punal Soozhndhu Azhagayaya - ‘நிவா’ என்கிற ஆறானது சுற்றிலும் பிரவஹிக்கப் பெற்றதும் புண்ய தீர்த்தங்களால் சூழப்பட்டு  அழகியதுமான