திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1166 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1166பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர் மிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து தாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 9
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் பெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-9
பதவுரை Show / Hide
செரு நீலம் வேல் கண் மடவார்திறத்து சினத்தோடு நின்று, Seru Neelam Veel Kan Madavaarthirathu Sinaththodu Nindru - யுத்தத்திற்குக் கருவியாய் நீல நிறத்தான வேல் போன்ற கண்களையுடைய ஸ்த்ரிகள் விஷயமாக வுண்டான கோபத்தோடு கூடியிருந்து (- (தில்லை சேர்மின்கள்-.))
மனத்தால் வளர்க்கும் அரு நீலம் பாவம் அகல, Manaththaal Valarkkum Aru Neelam Paavam Akala - நெஞ்சினாலே மேன்மேலும் வருத்தி செய்விக்கப்படுகிற போக்கமுடியாத நெஞ்சையிருள்மூடப் பண்ணுகிற பாவங்கள் நீங்கப்பெற்று
புகழ்சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர், Pugazhseer Amararukkum Eydhaadha Andaththu Iruppeer - புகழையுடைய பிரமன் முதலிய தேவர்கட்கும் துர்லபமான பரமபதத்திலே இருக்க வேண்டியிருக்கு மன்பர்களே?,
பெரு நீர்நிவா முத்தம் கொணர்ந்து உந்தி வித்தும் வயலுள் எங்கும், Peru Neernivaa Muththam Konarndhu Undhi Viththum Vayalul Engum - மிக்க நீரையுடைய ‘நிவா’ என்னும் ஆறானது முத்துக்களைக் கொண்டுவந்து தள்ளி விதைவிதைத்தாற்போலே சொருகப்பெற்ற வயல்களிலெல்லாம்
கயல் பாய்ந்து உகள, Kayal Paayndhu Ugal - மீன்கள் குதித்துத் துள்ளவும்
திரு நீலம் நின்று திகழ்கின்ற, Thiru Neelam Nindru Thigazhkindra - அழகிய நெய்தல்மலர்கள் எப்போதும் விளங்கவும் பெற்ற