திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1171 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே) 4 | வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே –3-3-4 | பதவுரை Show / Hideவளை கை நெடுங் கண் மடவார்ஆய்ச்சியர், Valai Kai Nedung Kan Madavaar Aaychiyar - வளையல்களணிந்த கைகளையும் நீண்ட கண்களையுமுடைய இடைப்பெண்கள் (- (சித்திரகூடத்து உள்ளான்-.)) அஞ்சி, Anji - பயப்பட்டு அழைப்ப, Azaippa - (‘காளிங்க மர்த்தனமாகிற இந்த பயங்கரமான செய்தியை வந்து பாருங்கள்’ என்று) அழைக்க, அண்டர், Andar - இடையர்கள் தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம்புக்கு, Thalaiththu Avizh Thamarai Poigai Than Thadampukku - மலர்ந்த தாமரைப் பூக்களையுடைய வொரு பொய்கையின் குளிர்ந்த கரையிலே சென்று காண, Kaan - பார்த்தவளவிலே முளைத்த எயிறு அழல் நாகத்து உச்சியில், Mulaiththa Eiyiru Azhala Naagaththu Uchiiyil - முளைத்த பற்களையுடையதும் விஷாக்நியை உமிழ்வதுமான காளியநாகத்தினுச்சியிலே நின்று, Nindru - நின்று கொண்டு அது வாட திளைத்து, Adhu Vaada Thilaiththu - அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனஞ் செய்து அமர் செய்து, Amar Seidhu - உல்லாஸமாக வீதியார எழுந்தருளின பெருமான் |