திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1172 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று தன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே) 5 | பருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து
அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து
உருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-5 | பதவுரை Show / Hideபருவம் கருமுகில் ஒத்து, Paruvam Karumugil Othu - கார்காலத்திலுண்டான கான மேகம் போன்றவனாயும் (- (சித்திரகூடத்து உள்ளான்-.)) முத்து உடை மாகடல் ஒத்து, Muthu Udai Magadal Othu - முத்துக்களையுடைய பெரிய கடல் போன்றவனாயும் அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து, Aruvi Thiral Thigazhkindra Aayiram Pon Malai Othu - அருவிகளின் கூட்டங்களால் விளங்குகின்ற ஆயிரம் பொன் மலைகள் போன்றவனாயும், உருவம் கருகுழல் ஆய்ச்சி திறந்து, Uruvam Karuguzhal Aaychchi Thirandhu - அழகிய கருத்த கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக மால் விடை இனம் செற்று, Maal Vidai Inam Settru - பெரிய ரிஷபங்களின் திரளைத் தொலைத்தவனாயும் தெருவில் திளைத்து வருவான், Theruvil Thilaithu Varuvaan - திருவாய்ப்பாடியின் வீதியிலே கூத்தாடிக்கொண்டு வருமவன் |