திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1173 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்) 6 | எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-6 | பதவுரை Show / Hideஎய்ய இலங்கை சிதைந்தது, Eyy Ilangai Sithaindhadhu - (அதுவுந் தவிர) “ஒரு அம்பை தொடுத்து விட்ட மாத்திரத்திலே லங்காபுரியானது அழிந்தொழிந்தது (- (சித்திரகூடத்து உள்ளான்-;)) ஆநிரை மலங்க வரும் மழை காப்பான், Aanirai Malanga Varum Mazhai Kaappaan - பசுக்களின் கூட்டம் துன்பமடையும்படியாக வந்து ஏழுநாள் ஓயாமல் பெய்த மழையை தடுப்பதற்காகவும் உய்ய, Uyya - (ஆநிரைகள்) பிழைப்பதற்காகவும் பருவரை தாங்கி காத்தான், Paruvarai Thaangi Kaaththaan - பெரிய கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப் பிடித்து எல்லாரையும் காப்பாற்றினான். என்று வையத்து எவரும் ஏத்தி வணங்க, Endru Vaiyaththu Evarum Aethi Vananga - என்று சொல்லி பூமியிலுள்ளாரெல்லாரும் துதித்துத் தொழும் படியாக அணங்கு எழுமா மலைபோலே தெய்வம் புள் ஏறி வருவான், Anangu Ezhumaa Malaipolae Deivam Pul Aeri Varuvaan - தெய்வாவேசங் கொண்ட ஒரு பெரிய மலைபோலே யிருக்கிற திவ்ய பக்ஷியாகியகருடன் மீதேறிக் கொண்டு எழுந்தருளும் பெருமான் |