திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1175 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1175பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து ஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும் நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்) 8
பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய் சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-8
பதவுரை Show / Hide
ஒருகால் அமரில் பொன் பெயரோன் வெருவ பொங்கி, Orukal Amarl Pon Peyron Veruva Pongi - முன்பொரு காலத்தில் போர்க்களத்தில் ஹிரண்யா ஸூரன் பயப்படும்படியாகக் கிளர்ந்து
அங்கு அவன் ஆகம் அளைத்திட்டு, Angu Avan Aagam Alaitthittu - அவ்விடத்திலே அவ்விரணியனது உடம்பிலே கை வைத்து
ஆயிரம் தோள் எழுந்தாட, Aayiram Thol Ezhundhaada - (அவனைச் சித்திரவதம் பண்ண வேணுமென்கிற பதற்றத்தாலே ) கைகள்  பலமுகமாகப் பெருக்கமடைய.
எரிகான்ற இரண்டு பைங்கண், Erikaanra Irandu Paingkan - நெருப்பை உமிழ்கின்ற பசுத்த இரண்டு திருக்கண்களையும்
நீண்ட எயிற்றொடு பேழ்வாய் சிங்கம் உருவில் வருவான், Neenda Eiyirrodhu Pezhvai Singam Uruvil Varuvaan - நீண்ட கோரப் பற்களையும்  பெரிய வாயையுமுடைய நரஸிம்ஹ ரூபியாய்க் காட்சி தந்த பெருமான் வருவான்