திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1176 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய் பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த ஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்) 9 | கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-9 | பதவுரை Show / Hideகருமுகில் போல்வது ஓர்மேனி, Karumugil Polvathu Ormaeni - காளமேகம் போன்று விலக்ஷணமான திருமேனியோடும் கையன ஆழியும் சங்கும், Kaiyan Aazhiyum Sangum - திருக்கைகளிலுள்ள திருவாழி திருச்சங்குகளோடுங் கூடி பெருவிறல் வானவர் சூழ, Peruviral Vaanavar Soozha - மிக்க சக்தியையுடைய தேவர்கள் சுற்றிலும் சூழ்ந்து ஸேவிக்கவும் ஏழ் உலகும் தொழுது ஏத்த, Ezhu Ulagum Thozhudhu Aetha - உலகத்திலுள்ளா ரெல்லாரும் வணங்கித் துதிக்கவும் பெற்று, ஒருமகள் ஆயர்மடந்தை, Orumagal Aayarmadanthai - விலக்ஷணையான நீளாதேவியோடும் ஒருத்தி நிலமகள், Oruththi Nilamagal - ஒப்பற்ற பூமிப்பிராட்டியோடும் மற்றை திருமகளோடும், Mattrai Thirumagalodum - இன்னும் ஸ்ரீதேவியோடுங்கூடி வருவான், Varuvaan - வருமவன் |