திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1178 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1178பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் – அபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும் ஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும் இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்) 1
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும் தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-1
பதவுரை Show / Hide
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூ அடி மண் வேண்டி, Oru Kural Aayi Iru Nilam Moo Adi Mann Vendi - விலக்ஷண வாமநரூபியாகி (மஹாபலியிடஞ் சென்று) விசாலமான இந்த பூமிக்குள்ளே மூவடிநிலத்தை மாத்திரம் யாசித்து (- (அப்படியே அவன் தாரைவார்த்து தத்தஞ்செய்தவாறே) (மூன்றாமடியை வைக்க இடம் காணாமையாலே) (அதற்கு அவன் தன் தலையைக் காட்டவே அதில் மூன்றாமடியை வைத்து ) (நீங்கள் செய்யத்தக்கது என்னவென்றால்))
உலகு அனைத்தும், Ulaku Anaithum - கீழ்மேலுலகங்களெல்லாவற்றையும் இரண்டடியாலே ஈர்அடியால் ஒடுக்கி ஆக்கிரமித்து,
ஒன்றும் தருக எனா, Ondrum Taruga Ena - மற்றோரடி வைப்புக்கு உரிய நிலத்தைக் கொடு என்று சொல்லி
மாவலியை சிறையில் வைத்த, Mavalaiyai Siraiyil Vaiththa - அந்த மஹாபலியைப் (பாதாளமாகிற) சிறையிலே கொண்டு  வைத்த
தாடாளன், Thaadalain - பெருமை பொருந்திய ஸர்வேச்வரனுடைய
தாள் அணைவீர், Thaal Anaiveer - திருவடிகளைச் சேரவேண்டியிருக்குமவர்களே!
தக்க கீர்த்தி அருமறையின் திரள் நான்கும், Thakka Keerthi Arumaraayin Thiral Naankum - தகுதியான கீர்த்தியையுடைய அரிய வேதங்களின் திரள்கள் நான்கும்
வேள்வி ஐந்தும், Velvi Aindum - பஞ்சமஹாயஜ்ஞங்களும்
அங்கங்கள் அவை ஆறும், Angangal Avai Aarum - வியாகரணம் முதலிய ஆறு அங்கங்களும்
இசைகள் ஏழும், Isaihal Aezhum - ஸப்த ஸ்வரங்களும்
தெருவில் மலி விழா வளமும், Theruvil Mali Vizha Valamum - வீதி நிறைந்த உத்ஸவவைபவங்களும் (ஆகிய இவற்றாலே
சிறக்கும், Sirakkum - சிறப்புப் பெற்ற
காழி, Kaazhi - காழியென்னும் க்ஷேத்திரத்திலுள்ள
சீராம விண்ணகரி, Seerama Vinnakari - சீராம விண்ணகரமென்னும் திருப்பதியை
நீர்சேர்மின், Neerchermin - நீங்கள் சென்று சேருங்கள்