திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1179 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1179பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று- ப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன் நம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க கமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்) 2
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச் சூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும் தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-2
பதவுரை Show / Hide
நான்முகன் நாள் மிகை தருக்கை, Naanmugan Naal Mikai Tharukkai - பிரமனுக்குஆயுள் மிகுதியினா லுண்டான கருவத்தை (- (நீங்கள் செய்ய வேண்டியதாவது) (காழி………சேர்மின்-.))
இருக்கு வாய்மை நலம் மிகுசீர் உரோமசனால்நவிற்றி, Irukku Vaimai Nalam Mikuseer Uromasanalnavittri - வேதாத்யயநநிஷ்டனும் நற்குணங்க ளமைந்தவனுமான ரோமசமஹர்ஷி யினால் போக்கடித்தவனாயும்.
நக்கன் ஊன்முகம் ஆர்தலை ஓடு ஊண் ஒழித்த எந்தை, Nakkan Oonmugam Aarthalai Odu Oon Ozhitha Endhai - மாமிசம் முதலியவை தங்கியிருந்த கபாலத்தைக் கொண்டு பிச்சையெ டுத்தலை தவிர்த்தவனாயுமுள்ள எம் பெருமானுடைய
ஒளிமலர்சேவடி அணைவீர், Olimalarsevati Anaiveer - அழகு பொருந்திய திருவடித் தாமரைகளை அணுகவேணுமென்றிருக்கு மன்பர்களே!
உழு சே ஓட, Uzhu Se Oda - உழுகிற எருதுகள் (வயல்களிலே ஓடுவதனால்.
சூல்முகம் ஆர்வளை அளைவாய் உகுத்த முத்தை, Soolmugam Aarvalai Alaiyai Ukutha Muththai - பிரஸவிக்குந் தருணத்திலிருந்த சங்குகள் வங்குகளிலே ஈன்ற முத்துக்களை
தொல் தருகு, Thol Tharugu - பெரிய கொக்குகளானவை
சினை என, Sinai Ena - தங்களுடைய முட்டையென்று (மயங்கி )
சூழ்ந்து இயங்க, Sozhndhu Iyanga - (அந்த முத்துக்களைச்) சுற்றி ஸஞ்சாரியா நிற்கப் பெற்றதும்
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
தேன்முகம் ஆர்கமலம், Thenmugam Aarkamalam - தேனெழுகுகின்ற முகம் பொருந்திய தாமரைகளையுடையதும்
சேல் பாய், Sel Pai - மீன்கள் துள்ளிக் குதிக்கப் பெற்றதுமான
வயல், Vayal - கழனியையுடைய