திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1183 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்) 6 | பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-6 | பதவுரை Show / Hideபைங் கண் விறல் செம் முகம் வாலி மாள, Paing Kan Viral Sem Mukam Vaali Maala - பசுமை தங்கிய கண்களையும் மிடுக்கையும் (கோபத்தாற்) சிவந்த முகத்தையுமுடைய வாலியென்னும் வாநர ராஜன் முடியும்படியாகவும். (- (அழகு ஆர்காழி ………. சேர்மின்-.)) படர் வனத்து கவந்தனொடும் திண் படை ஆர்கை வெம் கண் விறல் வீராதன் உக, Patar Vanaththu Kavandhanodum Thin Padai Aarkai Vem Kan Viral Veeradhan Uga - பரந்த காட்டிலுள்ள கபந்தனென் பவனும் திடமான ஆயுதங்கள் நிறைந்த கைகளையும் உக்ரமான கண்களையும் வலிமையையுமுடைய விராதனெ ன்பவனும் முடியும்படியாகவும் வில் குனிந்த, Vil Kunindha - வில்லை வனைத்து (அம்புகளைப் பிரயோகித்த) விண்ணவர் கோன், Vinnavar Kon - தேவாதி தேவனுடைய தாள் அணைவீர், Thaal Anaiveer - திருவடிகளையடைய விரும்புமன்பர்களே!;- வெற்பு போலும் துங்கம் முகம் மாளிகை மேல் ஆயம் கூறும், Verpu Polum Thungam Mukam Maaligai Mael Aayam Koorum - மலை போன்று உயர்ந்த முகத்தையுடைய மாளிகைகளின் மேல் நிலத்திலே நின்று ஸ்நேஹமாகப் பேசிக் கொண்டிருக்கிற துடி இடையார், Thudi Idaiyaar - உடுக்கை போன்று நுண்ணிய இடையையுடைய மாதர்களது கமலம் முகம் சோதி தன்னால், Kamalam Mukam Sothi Thannal - தாமரை போன்ற முகத்தின் காந்தியினாலே திங்கள் முகம் பனி படைக்கும், Thingal Mukam Pani Padaikkum - சந்திரனுடைய முகத்திலே வருத்தமுண்டாக்கப் பெற்ற |