திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1185 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1185பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான வ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய இத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் என்கை) 8
பட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல் மட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ நெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத் தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-8
பதவுரை Show / Hide
பட்டு அரவு ஏர்அகல் அல்குல், Pattu Aravu Aerakhal Alkul - பட்டுச் சேலை யணிந்துள்ளதும், பாம்பின் படத்தை யொத்து அழகியதும் அகன்றதுமான நிதம்ப ப்ரதேசத்தையும் (- (காழி……… சேர்மின்))
பவளம் செம் வாய், Pavalam Sem Vai - பவழம் போற் சிவந்த அதரத்தையும்
பணை நெடு தோள், Panai Nedu Thol - மூங்கில் போன்று நீண்ட தோள்களையும்
பிணை நெடு கண், Pinai Nedu Kan - அமுதம் போன்று இனிமையான வாய்மொழிகளையும்
மட்டு அவிழும் குழலிக்கா, Mattu Avizhum Kuzhalikka - முழயிலணிந்த மலர்களினின்றும் ) தேன்வெள்ள மிடா நின்ற கூந்தலையும் உடையளான ஸத்யபாமைப் பிராட்டிக்காக
வானோர்காவின், Vaanorkavin - தேவலோகத்துச் சோலையில் நின்றும்
மரம் கொணர்ந்தான், Maram Konarnthaan - பாரிஜாத மரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்த பெருமானுடைய
அடி அணைவீர், Adi Anaiveer - திருவடிகளைச் சேர விரும்புமன்பர்காள்
அணில்கள் தாவ, Anilkal Thaava - அணிற்பிள்ளைகள் கிளை கிளையாகத் தாவித்தவழ்வதனால்
நெடு இலைய கரு கமுகின் செங்காய் வீழ, Nedu Ilaiya Karu Kamukin Chengai Veezha - நீண்ட இலைகளையுடைய கறுத்த பாக்கு மரங்களின் பழுக்காய்கள் உதிர்ந்து விழ (அதனாலே)
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு, Neel Palavin Thaazh Sinaiyil Nerungu - நீண்ட பலாமரங்களினுடைய (காய்களின் கணத்தால்) தாழ்ந்த கிளைகளில் நெருங்கியிருக்கிற
பீனம் தெட்ட பழம் சிதைந்து மது சொரியும், Peenam Thetta Pazham Sithaindhu Madhu Soriyum - பருத்த கனியப்பழுத்த (பலாப்) பழங்கள் நசுங்கி தேனைப்  பொழியுமிடமான