திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1186 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற திருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்) 9 | பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே— –3-4-9 | பதவுரை Show / Hideபிறை தங்கு சடையானை வலத்தே வைத்து, Pirai Thangu Sadaiyainai Valatthae Vaiththu - சந்திரகலை தங்கியிருக்கப் பெற்ற சடைமுடியையுடையனான சிவனை வலவருகே வைத்துக் கொண்டிருப்பவனாயும் (- (காழி…….சேர்மின்)) பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து, Brahmanai Than Unthiyile Thotruviththu - நான்முகனைத் தனது ஜாபிக்கம லத்தில் படைத்தவனாயும் கறை தங்குவேல் தட கண் திருவைமார்வில் கலந்தவன், Karai Thanguvael Thada Kan Thiruvaimarvil Kalandhavan - சத்ருக்களின் ரத்தமாம்ஸக் கறை தங்கிய வேல் போன்று விசாலமான திருக்கண்களையுடைய பிராட்டியைத் திருமார்பிலே கொண்டுள்ளவனாயுமிருக்கிற பெருமானுடைய தாள் அணைகிற்பீர், Thaal Anaikirbeer - திருவடிகளைச்சேர விரும்புமன்பர்களே! சிறை வண்டு, Sirai Vandu - இறகையுடைய வண்டுகளானவை கழுநீர்கூடி, Kazhunirkoodi - செங்கழுநீர்ப்பூக்களில் (பேடையோடு) சேர்ந்திருந்து துறை தங்கு கமலத்து துயின்று, Thurai Thangu Kamalathu Thuyinru - நீர்நிலங்களிலுள்ள தாமரைப் பூவிலே (புகுந்து தேனைப் பருகி அங்கே) உறங்கி (அதன் பிறகு) கைதை தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி, Kaithai Thodu Aarum Pothi Soattruch Sunnaam Nanni - தாழைமடல்களில் பொருந்தியுள்ள பூந்தாதுத் துகள்களிலே புரண்டு களி பாடும் வயல் சூழ், Kali Paadum Vayal Soozh - களித்து இசைபாடப் பெற்ற கழனிகளால் சூழப்பட்ட |