திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1190 | பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்) 3 | நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்
செந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு
அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே –3-5-3 | பதவுரை Show / Hideஎறி நீர்வளம் செறுவில், Eri Neervalam Seruvil - அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களிலே (- (அணி ஆலி அம்மானே !–)) செந்நெல் கூழை, Sennel Kuzhai - செந்நெற்பயிர்கள் வரம்பு ஒரி இ, Varambu Ori I - வரப்புகளின்மேலே சாயவிட்டு அரிவார்முகத்து, Arivaar Mugaththu - அறுக்கிறவர்களுடைய முகத்திலே எழு வாளை, Ezhu Vaalai - (அக்கதிர்களில் நின்றும்) குதித்துப்பாய்ந்த மீன்களானவை (அபாயமுள்ள இவ்விடம் இனி நமக்குத் தகாதென்று அவ்விடம் விட்டுப்) புறப்பட்டுப் போய் அ நல் கரும்பு காடு அணையும், A Nal Karumbu Kaadu Anaiyum - அப்படிப்பட்ட நல்ல கருப்பஞ் சோலைகளிலே சேரப்பெற்ற நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை, Nennal Poi Varum Endru Endru Enni Iramai - ‘நேற்றுப்போனான், இன்று வருவன் இன்று வருவன்’ என்றிப்படி பாரித்துக்கொண்டு போதுபோக்கவேண்டாதபடி என் மனத்தே புகுந்தது, En Manaththae Pugundhadhu - (ஸ்திரப்ரதிஷ்டையாக நீ) என் நெஞ்சிலே புகுந்தவிது இம்மைக்கு என்று இருந்தேன், Immaikku Endru Irundhen - இந்த ஜன்மம் மழுமைக்குனமாம் என்று துணிந்திருக்கிறேன். |