திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1193 | பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து – சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே – நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன்) 6 | கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6 | பதவுரை Show / Hideசந்தி வேள்வி சடங்கு நால் மறை, Sandhi Velvi Sadangu Naal Marai - ஸந்தியாவந்தனம் முதலிய நித்ய கரிமங்களையும் யாகம் முதலிய நைமித்திக கருமங்களையும் காம்ய கருமங்களையும் தெரிவிக்கிற நான்கு வேதங்களையும் (- (அணி ஆலி அம்மானே!-;)) ஆதியாய் ஓதிஓது வித்து வரும் அந்தணாளர் அறா, Aadhiyaai Othioathu Viththu Varum Andhanalaar Aru - அநாதிகாலமாகம தாங்கள் ஓதியும் பிறர்க்கு ஓதுவித்தும் வருக்கின்றன பிராம்மணர்கள் விட்டுநீங்காத (நித்யவாஸம் பண்ணுமிடமான) நின்காமருசே அடி, Ninkamaruse Adi - உனது அழகிய திருவடிகளிலே கந்தம் மா மலர்எட்டும், Kandham Maa Malarettum - மணம் மிக்க சிறந்த எட்டு வகைப் பூக்களையும் ஸமர்ப்பித்து கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே, Kai Thozhudhu Ezhum Pundhiyen Manathae - வணங்கி உஜ்ஜீவிக்கவேணு மென்கிற அத்யவஸாய முடையேனான் என்னுடைய நெஞ்சிலே புகுந்தாயை போகல் ஒட்டேன், Pugundhaayi Pogaal Otten - வந்து புகுந்து வுன்னை இனி வேறோரிடம் போகவொட்டேன் |