திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1194 | பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன் ஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே) 7 | உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே –3-5-7 | பதவுரை Show / Hideநிலவு மலர்புன்னை நாழல் நீழல், Nilavu Malarpunnai Naazhal Neezhal - (இவற்றினுடைய நிழலில்) எப்போதுமுள்ள புஷ்பங்களை யுடைய புன்னை மரங்களென்ன ஞாழல் மரங்களென்ன (- (ஸமயம் பார்த்திருந்து)) தண்தாமரை மலரின் மிசை, Thanthamarai Malarin Misai - குளிர்ந்த தாமரைப் பூவின் மேலே மலி அலவன்கண் படுக்கும், Mali Alavankann Padukkum - பெரிய ஆண் நண்டுகள் பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திரை உலவு கடல், Thirai Ulavu Kadal - திரைக் கிளப்பத்தையுடைய திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு, Pallikondru - சயனித்திருந்து வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்புலவ, Vandhu Un Adiyen Manam Pugundha Appulava - அங்கு நின்றும் ஒடிவந்து உனது தாஸனான என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞனே! புண்ணியனே, Punniyaney - எனது பாக்கியம் வடிவெடுத்துள்ளவனே! புகுந்தாயை போகல் ஒட்டேன், Pugundhaayi Pogaal Otten - என்னிடம் வந்து சேர்ந்தவுன்னை இனி வேறிடம் போகவொட்டேன் |