| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 12 | திருப்பல்லாண்டு || 12 | பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியைச் சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே | பல்லாண்டு என்று, Pallandu Endru - நித்யமாய் மங்கள முண்டாகவேண்டும் என்று பவித்திரனை, Pavithiranai - (இயற்கையாகவே) பரிசுத்தனாய் பரமேட்டியை, Paramettiyai - மேலான ஸ்தானமான வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனாய் சார்ங்கம் என்னும், Saarngam Ennum - சார்ங்கமென்று திருநாமத்தை உடைய வில், Vil - வில்லை ஆண்டான் தன்னை, Aandaan Thannai - ஆளும் எம்பெருமானைக் குறித்து வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விட்டுசித்தன், Vittu Chithan - விஷ்ணுசித்தன் என்ற திருநாமத்தையுடைய பெரியாழ்வார் விரும்பிய, Virumbiya - விருப்பத்துடன் அருளிச்செய்த சொல், Sol - ஸ்ரீஸூக்தியை நல் ஆண்டு என்று, Nal Aandu Endru - (பல்லாண்டு பாடத்தக்க) நல்ல காலம் (நேர்படுவதே!) என்று நவின்று உரைப்பார், Navinru Uraippar - இடைவிடாமல் சொல்லுமவர்கள் நமோ நாராயணாய், Namo Narayanaaya - திருமந்திரத்தை அனுஸந்தித்து பல்லாண்டும், Pallandum - கணக்கற்ற காலங்கள் பரமாத்மனை, Paramaathmanai - பரமாத்மா நாராயணனை சூழ்ந்து இருந்து, Soozhnthu Irundhu - சுற்றிலும் இருந்து ஏத்துவர் பல்லாண்டே, Ethuvar Pallande - பல்லாண்டு பாடுவார்கள் |