திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1200 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1200பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து பர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் – அவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா- அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் – நம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில் நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —) 3
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன் தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும் கூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே –3-6-3
பதவுரை Show / Hide
நீர்வானம் மண் எரி கால் ஆய் நின்ற நெடுமால், Neervaanam Mann Eri Kaal Aayi Nindra Nedumaal - பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹகனா யிருக்கிற ஸர்வேச்வரன்
தன் தார்ஆய நறு துளவம், Than Thaar Aaya Naru Thulavam - தன்னுடைய மாலையாகிய மணம்மிக்க திருத்துழாயை
பெரும் தகையேற்கு அருளானே, Perum Thagayeerku Arulaanae - மிகவும் தகுதியையுடையளான எனக்கு கொடுத்தருள்கின்றானில்லையே;
சீர்ஆரும், Seeraarum - சீர்மை பொருந்திய
வளர் பொழில் சூழ், Valar Pozhil Soozh - வளர்கின்ற சோலைகளாலே சூழப்பட்ட
திரு ஆலி, Thiru Aali - திருவாலிமாநகரில்
வயல் வாழும் கூர்வாய சிறு குருகே, Vayal Vaalum Koovai Siru Kuruge - கழனியிலே வாழ்கின்ற கூர்மையான வாயலகையுடைய சிறிய கொக்கே!
குறிப்பு அறிந்து, Kurippu Arindhu - (திருவாலி யெம்பெருனானுடைய) திருவுள்ளக் கருத்தை அறிந்து கொண்டு வந்து (எனக்குச்) சொல்லிவேணும்.