திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1206 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1206பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே தலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே உன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ – அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று) 9
நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ? சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே –3-6-9
பதவுரை Show / Hide
சிலையாளா, Siliyaala - சாரங்க வில்லை அடக்கியாள்பவனே!
மாம் எய்த திறாளா, Maam Eytha Thiraala - (ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தங்களால் வருஷங்களை வீழத்தொழித்த பெருமிடுக்கனே!
திரு மெய்ய மலை ஆளா, Thiru Meyya Malai Aala - திருமெய்ய மென்னுந் திருப்பதியை ஆளுமவனே!
நிலை ஆள் ஆ நின் வணங்க வேண்டாயே ஆகிலும், Nilai Aal Aa Nin Vananga Vendaaye Aagilum - நிலைபெறற் அடிச்சியாக விருந்து உன்னை நான் வணங்கும்படி திருவுள்ளம் பற்றாமற்போனாலும்
ஒரு நாள், Oru Naal - ஒருநாளாகிலும்
என் முலை ஆள, En Mulai Aala - எனது முலைகள் ஆட்செய்யும்படியாக
உன் அகலத்தால் ஆளாய், Un Akalathaal Aalaai - உனது திருமார்பினால் அணைத்தருளுவேணும்;
நீ ஆள, Nee Aala - உன்னுடைய ஆளுகையில் உட்பட்டிருக்குமளவில்
வளை ஆன மாட்டோமே, Valai Aana Maattome - கையில் வளை தாங்காமல் துள்ளப்படவேண்டியதேயன்றோ எமக்குக் கதி.