திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1208 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் – லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று) 1 | கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ –3-7-1 | பதவுரை Show / Hideகள்வன் கொல்யான் அறியேன், Kalvan Kolyaan Ariyeen - (வந்து அழைத்துக் கொண்டு போனவன்) திருடனோ? (அன்றி உடையவன் தானோ?) எனக்குத் தொயிவில்லை; (- (இப்படி தம்பதிகளாகப்போன விவர்கள்)) கரியான் ஒரு காளை வந்து, Kariyaan Oru Kaalai Vandu - கருநிறத்தவனான ஒரு யௌவன புருஷன் வந்து, வள்ளி மருங்குல், Valli Marungul - கொடி போல் நுட்பமான இடையை யுடையளாய் என்தன் மடம் மானினை, Enthan Madham Maaninai - இள மான் போன்றவளான எனது மகளை போத என்று, Podha Endru - வா வா என்றழைத்து, வெள்ளி வளை கை பற்ற, Velli Valai Kai Patra - வெள்ளை வளைகளணிந்துள்ள கையைப் பிடிக்க, (உடனே அவள்) பெற்ற தாயாரை இட்டு அகன்று, Petra Thaayaarai Ittu Aghandru - பெற்ற வளர்த்த தாயாகிய என்னையும் உபேக்ஷித்து விட்டொழிந்து(போய் விட்டாள்;) அள்ளல் அம் பூ கழனி அணி, Allal Am Poo Kazhani Ani - சேற்று நிலங்களிலே அழகிய பூக்கள் நிறைந்த கழனிகளாலே அலங்கரிக்கப்பட்ட ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ? |