திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1210 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே – இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க – முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார்) 3 | அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை
வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-3 | பதவுரை Show / Hideவெம் சொல் நங்காய், Vem Sol Nangkaai - விரும்பத்தக்க வாய் மொழியையுடைய (அயல் வீட்டுப்) பெண்ணே! அரக்கர் குலம் பாவை தன்னை மூக்கு, Arakkar Kulam Paavai Thannai Mooku - ராக்ஷஸகுலத்துப் பதுமை போன்ற சூர்ப்பணகையினுடைய மூக்கை வெம் சினம், Vem Sinam - கடுங்கோபத்தாலே அரிந்த, Arintha - அறுத்தொழித்த விறலோன், Viralon - மிடுக்கையுடையனான அந்த யௌவந புருஷனுடைய திறம், Thiram - தன்மையை கேட்கில், Kaetkil - கேள்விப்படுமளவில் மெய்யே அஞ்சுவன், Meyye Anjuvan - உண்மையாக அஞ்சுகிறேன்! பஞ்சிய மெல் அடி, Panjiy Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான அடியையுடையவனும் எம் பணை தோளி, Em Panai Tholi - மூங்கில்போன்ற தோள்களை யுடையவளுமான என் மகள் பாக்க்க்கழிந்து, Paakkazhindhu - பெரும்பழிக்கு இடமாகி (அவனோடு செல்ல, அவ்விருவரும்) வஞ்சி அம் தண் பணை சூழ், Vanchi Am Than Panai Soozh - வஞ்சிக் கொடிகளாலழகிய குளிர்ந்த நீர் நிலகள் சூழ்ந்த வயல், Vayal - கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேர்ந்திருப்பர்களோ? |