திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1212 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை – இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ) 5 | தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்
வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-5 | பதவுரை Show / Hideதட தோளி இவள், Thada Tholi Ival - பெரிய தோள்களையுடைய என் மகள் எனை, Enai - என் விஷயத்தில் தாய் என்று இரங்காள், Thaai Endru Irangaal - பெற்றதாய் என்றும் இரக்கங்கொள்ளவில்லை; தனக்கு அமைந்த, Thanakku Amaindha - தனக்குத் தகுந்த மாயனை, Maayanai - ஆச்சரியனான திருமாலை மதித்து, Mathiththu - கொண்டாடிக் கொண்டு என்னை அகன்ற என்னை விட்டு நீங்கினவளாய் வேய் அன தோள் விசிறி, Vey Ana Thol Vichiri - மூங்கில் போன்ற தோள்களை வீசிக்கொண்டு பெடை அன்னம் என நடந்து போயின, Pedai Annan Ena Nadandhu Poyina - அன்னப் பேடைபோல் நடந்து சென்ற பூகொடியாள், Pookodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும்) புனல் ஆலி, Punal Aali - நீர்வளம்மிகுந்த திருவாலியிலே புகுவர்கொலோ, Puguvarkolo - சென்று சேருவர்களோ? |