திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1213 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே) 6 | என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ? –3-7-6 | பதவுரை Show / Hideஎன் துணை என்று எடுத்தேற்கு, En Thunai Endru Eduthetku - ‘இவள் நமக்கு உதவியாயிருப்பள்’ என்று வளர்த்து வந்த என் விஷயத்தில் (- (என் மகளானவள்) (இலங்கைக்குச் சென்று) (இருவரும்) (எழில் ஆலி புகுவர்கொலோ-.)) இறையேனும், Irayeenum - கொஞ்சமாகிலும் இரங்கிற்றிலன், Irangittrilan - இரக்கங்கொண்டாளில்லை; தன் துணை ஆய என்தன் தனிகைக்கும், Than Thunai Aay Enthan Thanikaikkum - (இதுவரையில்) தனக்கு உதவியாயிருந்த நான் தனியே யிருப்பதற்காகவும் இரங்கிற்றிலள், Irangittrilal - இரக்கங் கொண்டாளில்லை; வானவர்க்கு, Vaanavarkku - தேவர்களுக்கு வன் துணை ஆய், Van Thunai Aay - சிறந்த துணையாய் அரங்கத்து உறையும், Arangathu Uraiyum - கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற இன் துணைவனொடும் போய், In Thunaivanodum Poy - நல்ல துணைவனான திருமாலோடே சென்று |