திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1214 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே) 7 | அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-7 | பதவுரை Show / Hideமின்மையும், Minmaiyum - மின்னற் கொடியையும் (- (அவ்விருவரும்) (புகுவர் கொலோ சென்று சேருவர்களோ?)) வஞ்சியையும், Vanjiyaiyum - வஞ்சிக் கொடியையும் வென்று, Vendru - தோற்கடித்து இலங்கும், Ilankum - (மிகவும் ஸூக்ஷ்மமாக)விளங்காநின்ற இடையாள், Idaiyal - இடையை யுடையளான என் மகள், அன்னையும் அத்தனும் என்று, Annaiyum Aththanum Endru - தாய் தகப்பனென்று கூட அடியோமுக்கு, Adiyomukku - எங்கள் விஷயத்தில் இரங்கிற்றிலள், Irangittrilal - தயை பண்ணினாளில்லை; பின்னை தன் காதலன் தன், Pinnai Than Kaadhalan Than - திருமாலினது பெரு தோள் நலம் பேணினள், Peru Thol Nalam Peeninal - பெருமை தங்கிய தோள்களோடே அணைந்துபெறும் ஸுகத்தையே விரும்பின வளாய் நடந்து, Nadandhu - (அவனோடு கூட) நடந்து செல்ல, புன்னையும் அன்னமும் சூழ், Punnaiyum Annanum Soozh - புன்னைப் பொழிலும் அன்னப் பறவைகளும் சூழ்ந்த புனல், Punal - நீர்வளம் பொருந்திய ஆலி, Aali - திருவாலியிலே |