திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1218 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகள் எங்கள் அபிமதங்கள் செய்ய வேணும் – என்று பிரார்திக்கிற ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நெஞ்சே நீயும் சென்று அனுபவி -என்கிறார்) 1 | நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-1 | பதவுரை Show / Hideநந்தாவிளக்கே, Nandavilakke - ‘நித்யமாய் ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே! (- (என் மனனே வணங்கு-.)) அளத்தற்கு அரியாய், Alaththarku Ariyai - அளவிட முடியாதவனே! நரநாரணனே, Naranarayananey - நரநாரயணாவதாரம் செய்தருளினவனே! கரு மா முகில் போல் எந்தாய், Karumaa Mukil Pol Endhaai - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற எம்பெருமானே எமக்கே அருளாய் என, Emakke Arulai Ena - எங்களுக்கே அருள் செய்ய வேணும் என்று சொல்லி இமையோர்நின்று பரவும் இடம், Imaiyorninru Paravum Idam - தேவர்கள் இந்நிலத்தில் வந்து நின்று துதிசெய்யுமிடமானதும், அம் தேன், Am Then - அழகிய தேன்சாதி வண்டுகள் எத்திசையும், Eththisaiyum - எல்லாவிடங்களிலும் கந்தாரம் இசை பாட, Kanthaaram Isai Paada - தேவகாந்தாரி ராகம் பாடவும் களி வண்டு, Kali Vandu - களி வண்டு சாதியிற் பிறந்த வண்டுகள் மாடே, Maade - பக்கங்களில் மிழற்ற, Mizhatra - ஆலாபனை பண்ணவும் மந்தாரம், Mandhaaram - பாரிஜாத மரங்கள் நிழல் துதைந்து நின்று, Nizhal Thuthaindhu Ninru - நிழல் தர நெருங்கி நின்று மணம் மல்கும், Manam Malkum - பரிமளம் நிறைந்திருக்கப்பெற்றதுமான நாங்கூர்;, Naangoor - திருநாங்கூரிலுள்ள மணிமாடக் கோயில், Manimaadak Koyil - மணிமாடக் கோயிலென்னுந்திருப்பதியை |