திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1221 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே ஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 4 | சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-4 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகாலத்தில், சிறை ஆர, Sirai Aar - சிறகோடு கூடின ஒன்று, Ondru - ஒப்பற்ற உவணம் புன், Uvanam Pun - கருடப்பறவையின் மீது ஏறி, Eri - ஏறிக்கொண்டெழுந்தருளி செருயில், Seruyil - யுத்த்த்தில் (எதிர்த்த) கறை ஆர் நெடுவேல் அரக்கர், Karai Ar Neduveel Arakkar - (ரத்தக) கறை நிரம்பிய பெரிய வேற்படையை யுடைய ராக்ஷஸர்கள் திசை நான்கும் நான்கும் இரிய, Thisai Naanthum Naanthum Iriya - எட்டுத்திசைகளிலும் (சிலர்) சிதறியோடும்படியாகவும் மடிய, Madiya - (பலர்) உயிர்மாண்டொழியும் படியாகவும் (செய்து) கடல் சூழ் இலங்கை, Kadal Soozh Ilangai - கடலால் சூழப்பட்ட லங்காபுரியை கடந்தான், Kadandhaan - ஒழித்த பெருமானுடைய இடம் தான், Idam Thaan - இருப்பிடமான முறையால் வளர்க்கின்ற மூத்தியர், Murayal Valarkkinra Moothiyar - முறைப்படி ஹோமஞ்செய்கிற மூன்று அக்நிகளையுடையாய் நால் தேவர், Naal Thevar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவராய் ஐ வேள்வி, Ai Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டிப்பவராய் ஆறு அங்கர், Aaru Angkar - வேதாங்கங்கள் ஆறையும் பயின்றவராய் ஏழின் இசையோர், Ezhalin Isaiyor - ஸப்தஸ்வாங்களையும் அறிந்தவரான மறையோர், Maraiyor - ஸவதிகப்ராஹ்மணர்கள் வணங்க, Vananga - (நித்யவாஸம்பண்ணிக் கொண்டு) வணங்குவதனால் புகழ் எய்து நாங்கூர், Pugazh Eydhu Naangoor - புகழ் பெற்றிருக்கின்ற திருநாங்கூரிலே மணிமாடக்கோயில், Manimadakoyil - என் மனனே வணங்கு. |