திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1222 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1222பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்) 5
இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான் குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-5
பதவுரை Show / Hide
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம், Izai Aadu Kongai Thalai Nanjam - ஆபரணங்கள் விளங்கப் பெற்ற (பேய்ச்சி பின்) முலையிலுள்ள விஷத்தை (- (இடம் தான்-;) (மணிமாடக்கோயில் என் மனனே! வணங்கு-.))
உண்டிட்டு, Undittu - (அவளுயிரோடு கூட) உண்டவனாரையும்,
இளகன்று கொண்டு, Ilakanru Kondu - வத்ஸாஸூரனை (எறிதடியாக)க் கொண்டு
விளங்காய் எறிந்து, Vilangai Erinthu - கபித்தாஸூரன்மேல்சுழற்றி யெறிந்து இருவரையும் முடித்தவனாயும்,
வல் தாள் குருந்தம் தழைவாட ஒசித்து, Val Thaal Kurundham Thalaivada Osithu - வலிதான வேர்ப்பற்றை யுடைய குருந்தமரத்தை (அதன்) தழைகளெல்லாம் வாடியுலரும்படி முறித்தவனாயும்
தட தாமரை பொய்கை புக்கான், Thada Thamarai Poigai Pukkan - பெரிய தாமரைக் தடாகத்திலிழிந்(து கோபிகளுடனே ஜலக்ரிடை செய்) தவனாபுமுள்ள பெருமானுடைய
குழை ஆட, Kuzai Aada - மரங்களின் தளிர்கள் (மந்கமாருத்தாலே) அசைந்தாடுவதனால்
மாடே வல்லி குலம் ஆட, Madae Valli Kulam Aada - அவற்றினருகேயுள்ள பூங்கொடிகளின் திரள் ஆடவும்
குயில் கூவமழை ஆடு, Kuyil Koovamazhai Aadu - குயில்கள் கூவவும் மேகங்கள் உலாவுகின்ற
சோலே, Sole - சோலைகளிலே
முயில்  ஆலும், Muyil Aalum - மயில்கள் நர்த்தனம் பண்ணவும் பெற்றதாய்
நீடு கொடி மாடம் மல்கு நாங்கூர், Needu Kodi Madham Malku Nangoor - நீண்ட த்வஜங்கள் நாட்டப்பெற்ற மாடமாளிகைகளினால் நிறைந்திருக்கப்பெற்றதாம திருநாங்கூரிலே