திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1225 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1225பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்களோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 8
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-8
பதவுரை Show / Hide
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்தம் துகில் வாரியும், Thulai Aar Karu Men Kuzhal Aaychiyartham Thugil Vaariyum - (சுருண்டிருக்கையாலே) துளைகள் பொருந்திய கறுத்த மெல்லிய கூந்தலையுடைய இடைச்சிகளினுடைய ஆடைகளை அபஹரித்தும் (- (மணிமாடக்கோயில் என்மனனே ! வணங்கு))
சிற்றில் சிதைத்தும், Sitril Sithaiththum - (அவர்களிழைக்கிற) சிறு மணல் வீடுகளை அழித்தும்
முற்றா இளையார் விளையாட்டொடு, Muttira Ilaiyaar Vilaiyattodu - முற்றுதலில்லாத இளம் பெண்களுக்கு லீலா ரஸத்தையும்
காதல் வெள்ளம், Kaadhal Vellam - ஆசைப்பெருக்கையும்
விளைவித்த அம்மான், Vilaiviththa Amman - உண்டாக்கின பெருமானுடைய
இடம், Idam - இருப்பீடமாய்;
முதிராத இன் சொல் வளைவாய கிள்ளை, Muthiraadha In Sol Valaivaai Killaai - பரிபக்குவமாக மதுரமான சொல்லையும் வளைந்த வாயையுமுடைய கிளிகள்
வேல் நெடு கண் முளை வாள் எயிறு மடவார் பயிற்று, Vel Nedu Kan Mulai Vaal Eiyiru Madavaar Payitru - வேல்போன்று நீண்ட கண்களையும், முளைக்கின்றவளவாய் ஒளியையுடைய பற்களையுமுடையரான வைதிக ஸ்திரீகள் அப்யாஸம் செய்விக்கிற
மொழி கேட்டிருந்து, Mozhi Kaettirundhu - வேதச் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்து
மறை பாடும், Marai Paadum - வேதபாராயணம் பண்ணப்பெற்ற
நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே