திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1228 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1228பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று அது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் – அவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்- பெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்) 1
சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான் நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-1
பதவுரை Show / Hide
சலம்கொண்ட இரணியனது அகல் மார்வம், Salamkonda Iraniyanadhu Akal Maarvam - தப்பு எண்ணங்கொண்ட ஹிரண்யாஸுரனுடைய அகன்ற மார்வைப் பிளந்தொழித்தவனுயும் பெரிய கடலைக் கடைந்து (- (மட நெஞ்சே ! வணங்கு-.))
தடகடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை, Tadakadala Kadainthu Amudham Kondo Ugandha Kaalai - பெரிய கடலை கடைந்து (அதில் தோன்றிய) அமுதத்தை (தேவர்களுக்காக), எடுத்து(க் கொடுத்து திருவள்ள முவந்தனையும் நித்ய யௌவனமுடையனுயும்
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான்;, Nalam Konda Karu Mukil Pol Thirumeni Amman - அழகிய நீலமேகம் போன்ற திருமேனியையுடையவனுயுமிருக்கிற எம்பெருமான்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில், Naalthorum Magizhndhu Inidhu Maruvi Urai Koyil - எப்போதும் திருவுள்ள மூவந்து போக்கியமாக பொருந்தி வாழுமிடமாய்
சலம் கொண்டு, Salam Kondo - தண்ணீரைப்பகுதி
மலர்செழியும், Malarchezhiyum - புஷ்பங்களைச் சொரிகின்ற
ஓண் மல்லிகை செருந்தி சண்பகங்கள், On Malligai Serundhi Sanbagangal - அழகிய மல்லிகைச் செடிககளும் சுரபுன்னை மரங்களும் சண்பக மரங்களும்
மணம் நாறும், Manam Naarum - பரிமளம் வீசப் பெற்ற
வண் பொழிலி னூடே, Van Pozhili Noodae - அழகிய சோலைகளினுள்ளே
கயல் ஒடி வலங்கொண்டு விளையாடும் நாங்கூர், Kayal Odi Valankondu Vilaiyadum Naangoor - மீன்களானவை ஓடித்துள்ளி விளையாடப்பெற்ற திருநாகூரில்
வைகுந்த விண்ணகரம், Vaikundha Vinnagaram - வைகுந்தவிண்ணகரமென்னுக் திருப்பதியை