திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1229 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1229பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்- பூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்) 2
திண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் எண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-2
பதவுரை Show / Hide
திசை அனைத்தும் நடுங்க, Thisai Anaithum Nadunga - எல்லாத் திசைகளிலுள்ளவர்களும் நடுங்கும்படியாகவும்
தேவரோடு தானவர்கள் திசைப்ப, Thevarodu Thaanavarkal Thisaippa - தேவரும் தானவரும் கலங்கும் படியாகவும்
திண்ணிய ஒர்அரி உரு ஆய், Thinaiya Orari Uru Aayi - வலிமிக்க நரஸிம்ஹ ரூபியாய்
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர்மடுத்த நாதன், Iraniyanai Nanni Avan Maarvu Akalathu Ughirmadutha Nadhan - ஹிரண்யாஸுரனைக் கிட்டி அவனுடைய அகன்ற மார்விடத்து (திருக்கை) நகங்களை ஊன்றவைத்துப் பிளந்தொழித்த எம்பெருமான்
எண்ணில் பெரு செல்வத்து, Ennil Peru Selvaththu - எண்ணமுடியாமல் மிகுந்த (அளவிறந்த) (நிர்தோஷத்வம் முதலிய) பெருஞ்செல்வத்தோடு கூடி
எழில் விளங்கும் மறையும், Ezhil Vilangum Maraiyum - அழகு விளங்காநின்ற வேதங்களும்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர், Ezhu Isaiyum Kelvigalum Iyanra Peru Gunaththor - ஸ்தப ஸ்வரங்களும் வேதார்ந்த சரவணங்களும் பொருந்திய மஹா குணசாலிகளாய்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்து நாங்கூர், Mannil Migu Maraiyavargal Malivu Eydhu Naangoor - பூமிக்குள் சிறப்புப் பெற்ற வைதிக ப்ராமணர்கள் நிறைந்திருக்கப் பெற்ற திருநாகூரில்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில், Naalthorum Magizhndhu Inidhu Maruvi Urai Koyil - வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே வணங்கு