திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1230 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்) 3 | அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-3 | பதவுரை Show / Hideஅண்டமும் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திருவயிற்றின், Andamum Alai Kadhalum Avanigalum Ellam Amudhu Seidha Thiruvayittrin - அண்டங்களும் இந்த அலையெறிகின்ற கடல்களும் பூமிகளும் ஆகிய எல்லாவற்றையும் (பிரளய காலத்தில்) உட்கொண்ட திருவயிற்றையுடையவனும் (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்) (வைகுந்த * * * வணங்கு)) அரன் கொண்டு திரியும் முண்டம் அது நிறைந்தது, Aran Kondo Thiriyum Mundam Adhu Nirainthathu - ருத்ரன் தன் கையில் ஏற்றுக் கொண்ட திரிந்த தலையோட்டை நிறையச் செய்து அவன்கண் சாபம் அது நீக்கும், Avankal Sapam Adhu Neekum - அவனிடத்து நேர்ந்திருந்த பிரமஹக்கி சாபத்தைப் போக்கினவனுமான முதல்வன் அவன், Muthalvan Avan - ஜகத்காரண பூதனுன ஸவேச்வரன் எண் திசையும் பெரு செல்வம் பெரு செந்நெல் இள தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு, En Thisaiyum Peru Selvam Peru Senel Ila Thengu Kathali Ilai Kodi On Kulai Kamugodu - அழகிய குலைகளையுடைய பாக்கு மரங்களும் ஒன்றுக்கொன்று மிகைத்துக் கொண்டு வளம் சொரிய, Valam Soriyai - சேழித்து வளரபடிபற்றதும் வண்டுகள் பலவகையான ராகங்களைப் பாடப் வண்டு பல இசை பாட, Vandu Pala Isai Pada - வண்டகள் பலவகையான ராகங்களைப் பாடப் பெற்றதும் மயில் ஆலும் நாங்கூர், Mayil Aalum Nangoor - மயில்கள் ஆடப்பெற்றதுமான திருநாகூரில் |