திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1231 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்) 4 | கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-4 | பதவுரை Show / Hideகலை இலக்கும் அகல் அல்குல் அரக்கரி குலக் கொடியை, Kalai Ilakkum Akal Alkul Arakkari Kulak Kodayai - நல்ல சேலை விளங்கப்பெற்ற அகன்ற நிதம்ப ப்ர தேசத்தையுடையளான சூர்ப்பணகையினுடைய (- (மகிழ்ந்து இனிது மருவி உறைகோயில்) (வைகுந்த * * * வணங்கு)) காதொடு மூக்கு உடன் அரிய, Kaadodu Mooku Udan Ariya - காதையும் மூக்கையும் உடனே அறுக்க அவள் கதறி தலையில், Aval Kathari Thalaiyil - அவ்வரக்கி வாய்விட்டு அலறி தன் தலைமேலே அங்கை வைத்து, Angai Vaiththu - உள்ளங்கையை வைத்துக் கொண்டு முலை இலங்கை ஒடி புக செய்த தட தோளன், Mulai Ilangai Odi Puga Seidha Thad Tholan - மலைமேலுள்ள இலங்கையிலே ஓடிப் புகுந்து அழம்படி பண்ணிளன மஹாபாஹுவான பெருமான் சிலை இலங்க மணி மாடத்து உச்சி மிசை குலம், Silai Ilanga Mani Maadathu Uchi Misai Kulam - ஓளி விளங்குகின்ற ரத்தனங்களிழைத்த மாளிகைகளின் மூடிமேலேயிரக்கிற குலங்கள் செழு கொண்ர்ல் அகடு இரிய, Sezhu Konral Akadu Iriya - அழகிய மேகங்களினுடைய கீழ்யிவற்றைப் பிளக்க (அதனாலே) சொரிந்த செழு முத்தம், Sorindha Sezhu Muththam - பெய்த அழகிய முத்துக்கள் முலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்து நாங்கூர், Mulai Ilangu Maaligai Mael Malivu Eydhu Nangoor - மலைப்போல் விளங்குகின்ற மாளிகைகளின் மேலே குவிந்து கிடக்கப்பெற்ற திருநாகூரில் |