திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1232 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்) 5 | மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-5 | பதவுரை Show / Hideஅன்று மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கு ஆ, Andru Min Anaiya Nun Marungul Melliyarku Aa - முன்பொரு காலத்தில் மின்னல் போன்று நுட்பமான இடையுடைய ஸீதாபிராட்டிக்காக இலங்கைவேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர, Ilangai Vendan Mudi Orupadhu Thol Irupadhu Poi Uthira - இராவணனுடைய பத்துக் தலைகளும் இருபது தோள்களும் சின்னபின்னமாம்படி நிகரி இல் தன் சிலை விளைத்து, Nikari Il Than Silai Vilaitthu - ஒப்பற்ற தனது கோதண்ட வில்லை வளையச்செய்து (அம்புகளைச் செலுத்தி) இலங்கை பொடி செய்த தட தோளன், Ilangai Podi Seidha Thad Tholan - லுங்காபுரியைப் பொடியாகக் கின மஹாவீரன். செங்கலொடு, Sengalodu - செந்நெல்லும் செம் கமலம் சேல் கயல்கள் வாளை செய்கழு நீரோடு மிடைந்து கழனி மிடைந்து, Sem Kamalam Sel Kayalgal Vaalai Seykalzu Neerodu Midaindhu Kazhani Midaindhu - செந்தாமரைப்பூக்களும் மீன் விசேஷங்களும் செங்கழு நீர்பூக்களும் சேர்ந்து கொண்டு கழனி எங்கும் திகழ்ந்து மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்து நாங்கூர், Kazhani Engum Thigalndhu Mannu Pugazh Vedhiyargal Malivu Eydhu Naangoor - கழனிகளுக்குள்ள விடமெங்கம் விளங்கப்பெற்றிதும் நித்தியமான கீர்த்தியையுடைய வைதிகரிகள் நிறைந்திருக்கப் பெற்றதுமான திருநாகூரில் வைகுந்த * * * வணங்கு |