திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1233 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1233பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 6
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு திண்மை மிகு மருதொடு நற் சகடம் இறுத்து அருளும் தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் உண்மை மிகு மறையொடு நற் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-6
பதவுரை Show / Hide
பெண்மைமிகு வடிவு கொடு வந்தவளை, Penmaimigu Vadivu Kodu Vandhavazhai - உத்தம ஸ்தீரியின் வடிவைப் பூண்டுக்கொண்டு (கொல்லுவதற்காக) வந்த பூனையானவள். (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்))
பெரிய போயினது உருவு கொடுமாள், Periya Poyinathu Uruvu Kodumaal - தன் நிஜமான கொடிப் பேய் வடிவத்துடனே இறக்கும் படியாக
உயிர்உண்டு, Uyirundhu - அவளது உயிரை உறிஞ்சியுண்டவனையும்
திறமைமிகு மருதோடு நலசங்கம் இறுத்து அருளும் தேவன் அவன், Thiramaimigu Marudhodu Nalasangam Iruthu Arulum Devan Avan - திடமாக வேரூன்றிக் கிடந்த மருத மரத்தையும் கொடிய சகடத்தையும் முறித் தருளினவனுயுமுள்ள அப்பெருமான்
உண்மை மிகு மறையோடு, Unmai Migu Maraiyodu - உள்ளது உள்ளபடி சொல்லுகிற வேதங்கடிளென்ன
நல்களைகள், Nalkalailgal - (அந்த வேதங்களுக்கு வியாக்கியாமான) சிறந்த அதிஹாஸ புராணுதிகளென்ன (இவற்றறையும்)
நிறை, Nirai - நிறைந்து கிடக்கிற
பொறைகள், Poraihal - பொறுமை முதலிய குணங்களென்ன
உதவ கொடை, Udhava Kodai - கேட்டார்கேட்டபடி கொடுக்கும் ஔதார்யமென்ன
என்று இவற்றின் ஒழிவு இ;ல்லா, Endru Ivatrin Ozhivu Illa - ஏன்றிவை முதலான குணங்களையும் எப்போதும் உடையவர்களாய்
பெரிய வண்மை மிகு மறையவர்கள், Periya Vanmai Migu Maraiyavargal - ஆத்ம ஸமமர்பணமாகிற சிறந்த ஔதார்மாய் உடையவர்காய்
மலிவு எய்தும் நாங்கூர், Malivu Eydhum Naangoor - முலிந்திருக்கப்பெற்ற திருநாகூரிலே வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வண்ங்கு