திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1234 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1234பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து அநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே இளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர் வைகுந்த விண்ணகரம்) 7
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளங்குளிர அமுது செய்து இவ் வுலகுண்ட காளை உகந்தினிது நாள் தோறும் மருவி யுறை கோயில் இளம்படி நற் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல் ஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால் வளங்கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வண்ங்கு மட நெஞ்சே –3-9-7
பதவுரை Show / Hide
இள கன்று கொண்டு விளங்கனியை உதிர எறிந்து, Ila Kankuru Konda Vilanganiyai Uthira Erindhu - (வத்ஸுஸர னென்கிற ஒரு இளங்கன்றைத் தூக்கி விளாம்பழங்கள் உதிரும் படி (கபி த்தாஸுரன் மேல்) வீசி யெறிந்தவனையும்
வேல் நெடு கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர்வெண்ணெய், Vel Nedu Kan Aaychiyargal Vaiththa Thayirvennai - வேல் போன்ற நீண்ட கண்களைக் யுடையரான இடைச்சிகள் (உறிகளில்) சேமித்த வைத்த தயிரையும் வெண்ணெயையும்
உளம் குளிர அமுது செய்து, Ulam Kulira Amuthu Seythu - தன் திருவுள்ளம் குளிரும்படி அமுதுசெய்தும் (அதனால்) திருபடதிபெறாதவன் போன்று)
ஈன் கரும்ப, Een Karumbu - இனிய கரும்பகளும் (ஆகிய இவை)
கண்வளர, Kanvalara - நாடோறும் செழித்தோங்கி வளரும்படி
கால்தடவும் புணலால், Kaalthadavu Punalaal - அடியிலே பாய்கின்ற தண்ணீரினால்
இஉலகு உண்ட, Iulagu Unda - இந்த லோகங்களையும்யெல்லாம் அமுது செய்தவனுயுமிருக்கிற
காளை, Kaalai - நித்யயுவானான பெருமான் உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்
இள படி நல் கழுகு, Ila Padi Nal Kazhugu - இளமையை இயல்வாகவுடைய நல்ல பாக்கு மரங்களும்
குலை தெங்கு, Kulai Thengu - குலைகளையுடைய தென்னை மரங்களும்
கொடி செந்நெல், Kodi Sennel - வெற்றிலைக் கொடிகளும் செந்நெற்பயிர்களும்
வளம் கொண்ட பெரு செல்வம், Valam Konda Peru Selvam - அழகு மிகுந்தம் மிக்க ஜச்சரியம் பொலிந்திருப்பதும்
அணி, Ani - அழகியதுமான  நாங்கூர்திருவாங்கூரிலே வைகுந்தவிண்ணகரம் மட நெஞ்சே வணங்கு