திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1235 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்) 8 | ஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த
அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு யுடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை யடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-8 | பதவுரை Show / Hideஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழத்த அடல் ஆழி தட கையன், Aaraadha Sinathin Migu Narakan Uram Azhatta Adal Aazhi Thada Kaiyan - தணியாமல் வளர்கின்ற கோபத்தினால் மிகுந்தவனான நரகாசுரனுடைய மிடுக்கை தொலைந்த தீக்ஷ்ணமான திரு வாழியை தனது தடங்கையிலே யுடையவனும் (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோவில்) (வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வணங்கு;)) ஆலர் மகட்கும் அரற்கம் கூறு ஆக கொடுத்தருளும் திரு உடம்பன், Aalar Makadkum Ararkkam Kooru Aaga Koduththarulum Thiru Udanban - பெரிய பிராட்டியார்க்கும் சிவ பிரானுக்கும் பகுதியாகக் கொடுக்கப்பட்ட திருமேனியை யுடையவனும் இமையோர் குலம் முதல்வன், Imayior Kulam Muthalvan - நித்யஸூரிகள் திரளுக்கு நாதனுமான எம்பெருமான் மாறாத மலர் கமலாம், Maaradha Malar Kamalam - மாறாத மலரையுடைய தாமரைகள் செங்கழுநீர், Sengal Nheer - செங்கழுநீர்ப்பூக்கள் (ஆகிய இவற்றில் நின்று) மது வெள்ளம் ததும்பி ஒழுக உழவர், Madhu Vellam Thadumbi Ozhuga Uzhavar - தேன் வெள்ளமானது இடைவிடாது பாய்வதனால் பயிர்த் தொழில் செய்பவர்கள் வுயல் மடை அடைப்பு, Vuyal Madai Adaippu - (தங்கள் தங்கள்) கழனி மடைகளை யடைக்கப் பெற்றதும் மாறாத பெரு செல்வம் வளரும் அணி நாஞ்கூர், Maaradha Peru Selvam Valarum Ani Naangkoor - ஓயாத மிக்க செல்வம் வளர்வதுமான அழகிய திருநாங்கூரில் |