திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1236 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1236பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே எங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 9
வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே ! எமக்கு அருளாய் என்னும் ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் செங்கயலும் வாளைகளும் செந்நெல் இடைக் குதிப்பச் சேலுகளும் செழும் பணை சூழ் வீதி தொறும் மிடைந்து மங்குல் மதிய கடு உரிஞ்சி மணி மாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-9
பதவுரை Show / Hide
வங்கம் மலி தட கடலுள், Vangam Mali Thada Kadalul - மரக்கலங்கள் நிறைந்து கிடக்கிற பெரிய திருப்பாற்கடலிலே (- (மகிழ்ந்து இனிதுமருவி உறை கோயிவில்) (வைகுந்த விண்கரம் மட நெஞ்சே! வணங்கு-;))
வானவர்களோடு மா முனிவர் பலர்கூடி, Vaanavarkalodu Maa Munivar Palarkoodi - தேவர்களும் மஹர்ஷிகளும் பலர் ஒன்றுகூடி
மா மலர்கள் துவி, Maa Malargal Thuvi - சிறந்த புஷ்பங்களைப் பணி மாறி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும், Engal Thani Naayagane Emakku Arulai Ennum - எங்களுக்கு அத்விதீய நாதனானவனே! எமக்குக் கிருபை பண்ணவேணும் என்று வேண்டப்பெற்ற
ஈசன் அவன், Eesan Avan - எம்பெருமான்
செம் கயலும் வாளைகளும், Sem Kayalum Valaigalum - செவ்விய கயல் மீன்களும் வாளை மீன்களும்
செந்நெலிடை குதிப்ப, Sennelidai Kudippa - செந்நெற் பயிர்களிடையே துள்ளிக் குதிக்க
சேல் உகளும் செழு பணைசூழ் விதிதொறும் மிடைந்து, Sel Ugalum Sezhu Panaisuzhu Vidhithorum Midainthu - சேல் மீன்களும் டவே களித்து விளையாடப்பெற்ற அழகிய தடாகங்கள் பெரிய வீதிகள் தோறும் நெருங்கியிருக்கப் பெற்றதும்.
மங்குல மதி அகடு உரிஞ்சும் மணி மாடம், Mangula Mathi Akadu Urinjum Mani Madham - ஆகாசத்தில் திரிகிற சந்திரனுடைய கீழ்வயிறு தேயுமத்படியுயர்ந்த மணி மாடங்களை யுடையதுமான
நாங்மூகூர், Nangmoogoor - திருநாங்கூரில்