திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1238 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட – தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான ஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம்) 1 | திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-1 | பதவுரை Show / Hideஇருபாலும் திருமடந்தை மண் மடந்தை திகழ, Irubaalum Thirumadandhai Mann Madandhai Thigazha - இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி பூதேவிகள் விளங்க நின்று (- (அரியமேய விண்ணகரம் மடநெஞ்சே! வணங்கு)) அடியவர்கட்கு தீ வினைகள் போய் அகல, Adiyavarkadku Thee Vinaigal Poi Akala - ஆச்ரிதர்பக்கலில் கொடிய பாவங்கள் தொலையும் படியான என்றும் அருள் நடந்து, Endrum Arul Nadandhu - எப்போதும் க்ருபைபண்ணி இவ் ஏழ் உலகத்தவர் பணிய, Iv Ezh Ulagaththavar Paniya - இந்த ஸப்த லோகங்களிலுள்ளாராலும் ஆச்ரயிக்கப்பெற்று வானோர் அமர்ந்து ஏத்த, Vaanor Amarnthu Aetha - நித்யஸூரிகள் கால் பொருந்தில் தோத்திரம் பண்ணப் பெற்று இருந்த இடம், Irundha Idam - (எம் பெருமான்) எழுந்தருளியிருக்குமிடமாய் பெரு புகழ் வேதியர் வாழ்தரும் இடங்கள், Peru Pugazh Vedhiyar Vazhtharum Idangal - மிக்க புகழை யுடையரான வைதிகர்கள் வாழ்கின்ற இடங்களை யுடைத்தாய் மலர்கள் மிகு கைதைகள், Malargal Miku Kaithaigal - புஸ்ப ஸம்பத்தியையுடைய சேங்கழுநீர் தாமரைகள், Sengalunir Thamaraihal - தாழைகளும் செங்கழுநீர் களும் தாமரைகளும் தடங்கள் தொறுநும், Thadangal Thorunam - தடாகங்கள் தோறும் (நிறைந்து ) இடங்கள் தொறும் திகழ, Idangal Thorum Thigazha - கண்விட மெங்கும் விளங்கப்பெற்றதாய் பொழில், Pozhil - ஆகாச ஸ்தலங்களைத் தழுவி யிருப்பதனாலே ஏழில் திகழும் நாங்கூர், Ezhal Thigazhum Nangoor - அழகு விளங்கா நிற்பதான திருநாங்கூரில் |