திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1239 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1239பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே தன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் – என் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி- கொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்) 2
வென்றி மிகு நரகனுரமது அழிய விசுறும் விறல் ஆழித் தடக்கையன் விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில் என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் அன்று உலகம் படைத்தவனை யவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-2
பதவுரை Show / Hide
வென்றி மிகு நரகன், Vendri Miku Naragan - ஜெயசீலனான நரகாசுரனுடைய
ஊரம் அது அழிய, Ooram Adhu Azhiya - மிடுக்கு அழியும்படி
விசிறும், Visirum - (அவன் மீது) வீசி யெறியப் பட்ட
விறல் ஆழி, Viral Aazhi - வலிவுள்ள திருவாழியை
தட கையன், Thada Kaiyan - பெரிய திருக்கையிலே உடையவனும்
அன்று, Anru - முன் பொருகாலத்தில்
விண்ணவர்கட்கு, Vinnavarkadku - இந்திரன் முதலிய தேவர்களுக்காக
குன்று கொடு, Kundru Kodu - மந்தர பர்வதத்தை நட்டு
குரைகடலை, Kuraikadalai - கோஷஞ்செய்யு மியல்வை யுடைய ஜமுத்ரத்தை கடைந்து
கடைந்து, Kadaindhu - கடைந்து
அமுதம் அளிக்கும், Amudham Alikkum - அமிருதத்தை யெடுத்துக் கொடுத்தவனும்
குரு மணி, Guru Mani - சிறந்த ரத்னம் போன்றவனும்
என் ஆர் அமுதலம், En Ar Amudhalam - அமுதம் போன்றவனுமான பெருமான்
குலவி, Kulavi - கொண்டாட்டத்துடனே
உறை கோவில், Urai Kovil - எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம்
ஏன்றும் மிகு, Aendrum Migu - எப்பொழுதும் வளர்ந்துவருகிற
பெரு செல்வத்து எழில் விளங்கும், Peru Selvaththu Ezhil Vilangum - அளவற்ற செல்வத்தின் அழகு விளங்கும்படியுள்ள வர்களாய்
மறையோர், Maraiyor - வேதம் வல்லவர்களாய்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர், Ezhu Isaiyum Kelvigalum Iyanra Peru Gunaththor - முன்பு உலகங்களைப் படைத்த பிரமனைப் போன்றவர்களான அந்தணர்கள் வாழ்கிற திருநாங்கூரில்