திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1241 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1241பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த திரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்) 4
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் சேடேறு மலர்ச் செருந்தி செழுங்கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வான் பொழிலினூடே ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-4
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொரு காலத்தில் (- (அரிமேய விண்ணகரம்             வணங்கு))
ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு, Odaadha Aal Ariyin Uruvam Adhu Konda - போரில்அ பின்வாங்க மாட்டாத நரஸிம்ஹ  ரூபியாகி
உலப்பு இல் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி, Ulapu Il Migu Peru Varaththu Iraniyanai Patri - முடிவில்லாத மிகப்பெரிய வரங்ளைப் பெற்றவனான ஹிரண்யாஸூரனை பிடித்துக் கொண்டு
வாடாத வள் உகிரால் பிளந்து, Vaadaadha Val Ukiraal Pilandhu - வுளையாத தீக்ஷ்ணமான நகங்களினால் கிழித்து
அவன் தன் மகனுக்கு அருள் செய்தான், Avan Than Maganukku Arul Seithaan - அவனது புத்திரனான ப்ரஹ்லாதனுக்கு க்ருபை பண்ணின பெருமான்
வாழும் இடம், Vaalum Idam - எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசம்
மல்லிகை செங்கழுநீர், Mallikai Chengaluneer - மல்லிகைகளும் செங்கழுநீர் களும்
சேடு ஏறு மலர் செருந்தி, Sedu Eru Malai Serunthi - திரள் திரளாகப் பூத்த பூக்களையுடைய ஸூர புன்னைகளும்
செழு கமுகம் பாளை, Sezhu Kamugam Paalai - அழகிய பாக்குப் பாளைகளும்
செண்பகங்கள், Senbagangal - செண்பகப் பூக்களும்
மணம் நாறும் வண் பொழி லின் ஊடே, Manam Naarum Van Pozhi Lin Oode - புரிமளம் வீசப்பெற்ற அழகிய சோலைகளின் நடுவே
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர், Aadu Eru Vayal Alaip Pugai Kamazhum Naangoor - கரும்பு ஆடுகைக்காக ஏறின வயலில் கரும்பாலைகளின் புகை பரிமளிக்கப் பெற்ற திருநாங்கூரிலே.