திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1242 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1242பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும் எல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 5
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே அண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் அண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-5
பதவுரை Show / Hide
கண்டவர் தம் மனம் மகிழ, Kandavar Tham Manam Maghizha - பார்த்தவர்களெல்லாருடைய மனமும் ஆநந்தமடையும்படி
மாவலி தன் வேள்வி, Mavali Than Velvi - மஹாபலியின் யாகபூமியிலே
களவின் மிகு சிறு குறள் ஆய், Kalavin Migu Siru Kural Aayi - வஞ்சனை மிகுந்த சிறுத்த வாமநரூபியாய்க் கொண்டு
மூ அடி என்று இரந்திட்டு, Moo Adi Endru Irandhittu - மூவடிநிலம் தா என்று யாசித்து
அண்டமும், Andamum - மேலுலகங்களையும்
இவ் அலை கடலும் அவனிகளும், Iva Alai Kadhalum Avanigalum - அலையெறிகின்ற இக்கடல்களோடு கூடின பூமண்டலத்தையும்
எல்லாம் அளந்தபிரான், Ellam Alandhapiraan - மற்றுமெல்லாவற்றையும் அளந்து கொண்ட எம் பெருமாள்
அமரும் இடம், Amarum Idam - எழுந்தருளி யிருக்கும் தவ்ய தேசம்.
வுளம் கொள் பொழில் அயலெ, Vulam Kol Pozhil Ayalel - அழகிய சோலைகளின் அருகே
அண்டம் உறு முழவு ஒலியும், Andam Uru Muzhavu Oliyum - ஆகாசத்தளவும் வியாபிக்கிற வாத்யகோஷங்களும்
வுண்டு இனங்கள், Vundu Inangal - வண்டுத்திரள்களின் ரீங்காரமும்
அரு மறையின் ஒலியும், Aru Maraiyin Oliyum - அருமையான வேதங்களின் கோஷமும்
மடவார் சிலம்பின் ஒலியும், Madavaar Silampin Oliyum - மாதருடைய காலணிகளின் ஓசையும்
ஆண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும்   அரிமேய விண்ணகரம், Aandam Urum Alai Kadalin Oli Thigazhum Arimeya Vinnaikaram - அண்டபித்தியளவுஞ் சென்று அலையெறிகிற (பிரளயக்) கடலின் கோஷம் போலே விளங்கப்பெற்ற  திருநாங்குகூரிலே  வணங்கு