திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1245 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து மன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்) 8 | கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-8 | பதவுரை Show / Hideகன்று அதனால் விளவு எறிந்து, Kandru Adhanal Vilavu Erinthu - வத்ஸாஸூரனைக் கொண்டு கபித்தாஸூரன்மேல் வீசியெறிந்து (- (அரிமேய விண்ணகரம் வணங்கு)) கனி உதிர்த்த காளை, Kani Uthirtha Kaalai - விளாம்பழங்களை உதிரச் செய்த இளையவனும் காமரு சீர், Kaamaru Seer - விருப்பத்தக்க கல்யாண குணங்களையுடையவனும் முகில் வண்ணன், Mugil Vannan - காளமேக நிறத்தனும் முன் காலிகள் காப்பான, Mun Kaaligal Kaappana - முன்பெருங்கால் பசுக்களை (பெருமழையினின்று) காக்கும் பொருட்டு குன்று அதனால் மழை தடுத்து, Kundru Adhanal Mazhai Thaduthu - கோவர்த்தனமலையினால் மழையைத் தடை செய்தவனும் குடம் ஆடு கூத்தன், Kudam Aadu Koothan - குடக்கூத் தாடினவனுமான பெருமான் குலவும் இடம், Kulavum Idam - உவந்திருக்கும் திவ்யதேசம் கொடி மதிள்கள், Kodi Mathilkal - த்வஜங்கள் பொருந்திய மதிள்களையும் மாளிகை கோபுரங்கள், Maaligai Koorangal - மாளிகைகளையும் கோபுரங்களையும் துன்று மணி மண்டபங்கள், Thunru Mani Mandapangal - நெருங்கின மணி மயமான மண்டபங்களையும் சாலைகள், Saalaihal - தார்ச்சாலைகளையும் உடைத்தாய் தூ மறையோர் தொக்கு ஈண்டி, Thoo Maraiyore Thokku Eendi - பரிசுத்தரான அந்தணர்கள் கும்பலாகக் கூடியிருக்கும் மிடமாய் தொழுதியொடுமிக பயிலும் சோலை, Thozhuthiyodumiga Payilum Solai - பறவைகளின் ஒலியோழுடு மிகவுங் கூடியிருக்கின்ற சோலைகளிலே அன்று அலர்வாய் பது உண்டு, Andru Alarvai Pathu Undu - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களில் தேனைப் பருகி அங்கு அளி முரலும் நாங்கூர், Angu Ali Muralam Nangoor - அவ்விடத்தில் வண்டுகள் பாடப் பெற்றதான் திருநாங்கூரிலே |