திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1246 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1246பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) () 9
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-9
பதவுரை Show / Hide
வஞ்சனையால் வந்தவள்தன் உயிர் உண்டு, Vanjanaiyala Vanthaval Than Uyir Undu - கபட வேஷத்தோடு வந்தவளான பேய்சியினுடைய உயிரை ஹிஞ்சி யுண்டவனாயும்
வாய்த்த தயிர் உண்டு, Vaayththa Thayir Undu - கையிலகப்பட்ட தயிரையெல்லாம் உண்டவனாயும்
வெண்ணெய் அமுது உண்டு, Vennai Amuthu Undu - வெண்ணெயை அமுது செய்தவனாயும்
வலிமிக்க கஞ்சன் உயிர் அது உண்டு, Valimikka Kanjan Uyir Adhu Undu - பலசாலியான கம்ஸனுடைய உயிரை அபஹரித்தவனாயும்
இ உலகு உண்ட, I Ulagu Unda - இவ்வுலகங்களையெல்லாம் (பிரளயக்கடல் கொள்ளாதபடி) அமுது செய்தவனாயுமுள்ள
காளை, Kaalai - யுவாவானவன் கருதும் இடம்
காவிரி, Kaviri - காவிரியாறானது
சந்து அகில் கனகம் ;உந்தி, Sandhu Akil Kanagam Undhi - சலதன மரங்களையும் அகில் மரங்களையும் ஸ்வர்ணங்களையும் தள்ளிக் கொண்டு வந்து
மஞ்ச உலவு பொதுழிலூடும் வயலூடும் வந்து வளம்கொடுப்ப, Manja Ulavu Pothuzhiloodum Vayaloodum Vanthu Valamkoduppa - மேகமண்டலத்தளவும் ஓங்கின சோலைகளிலும் கழனிகளிலும் தபிரவேசித்து (அவற்றுக்குச்) செழிப்பையுண்டாக்கப் பெற்றதும்
மா மறையோர் மாமலர்கள் தூவி அங்கு அஞ்சலித்து, Maa Maraiyor Maamalargal Thuvi Angu Anjaliththu - மஹா வைதிக ப்ராஹ்மணர்கள் சிறந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அங்கே கை கூப்பி நின்று
அரிசரண் என்று இறைஞ்சும், Arisarann Endru Irainchum - ‘ஹரி’ உன் திருவடிகளை சரணம் என்று சொல்லி வணங்கப்பெற்றதுமான
அணிநாங்கூர், Aninangoor - திருநாங்கூரிலே
அரிமேய விண்ணகரம், Arimeya Vinnakaram - வணங்கு