திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1247 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1247பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து ஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்- இத்தை அப்யசிதவர்கள்-இஹலோகத்திலே ஹர்ஷர்கள் பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய் திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்) 10
சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில் அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான் கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும் ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே –3-10-10
பதவுரை Show / Hide
சென்றுசினம் ஏழ் விடையும் பட அடர்ந்து, Senru Sinam Ezhu Vidaiyum Pada Adarnthu - தானே சென்று கொடுமை மிகுந்த ஏழு ரிஷபங்களும் முடியும்படி பொருது
பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில், Pinnai Sevvi Thol Punarndhu Ugandha Thirumal Than Koyil - நப்பின்னைப் பிராட்டியினுடைய அழகிய தோளோடே கலந்து திருவுள்ளம் மகிழ்ந்த லக்ஷ்மீநாதனுடைய ஸந்நிதியாய்
அமர்ந்த, Amarntha - பொருந்தி யெழுந்தருளியிக்கிற
செழு குன்றை, Sezhu Kunrai - அழகிய மலைபோன்ற எம்பொருமானைக் குறித்து
கன்றிநெடு வேல் வலவன் மங்கை யர்தம் கோமான் கலிகன்றி, Kanrinedu Vel Valavan Mangai Yartham Koman Kalikanri - கோபக்குறியோடு கூடினதாய் நீண்டதான வேற் படையைத் தரிக்கவல்லவரும் திரு மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான திருமங்கை யாழ்வார்
அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர், Ayanum Aran Seyyum Anaiyavargal Nangoor - பிரமனையும் ருத்ரபுத்திரனான ஸூப்ரஹ்மண்யனையும் ஒத்திருக்கின்றவர்கள் (வேதம் வல்லவர்களாய் அழகியவர்காளன அந்தணர்கள்) வாழ்கிற திருநாங்கூரில்
அரிமேய வண்ணகரம், Arimeya Vannakaram - அரிமேய விண்ணககரமென்னுந் திருப்பதியில்
ஒலிமாலை ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடும் ஒன்றும் இவை, Olimaalai Aindhinodu Moondrum Ondrinodum Ondrum Ivai - அருளிச் செய்த சொல்மலையாகிய இப்பத்துப் பரிசுகளையும்
கற்றுவல்லார், Kattruvallar - ஓதி யுணர்ந்து ஸேவிக்க வல்லவர்கள்
உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்திலே
உத்தமர்கட்கு உத்தமர் ஆய், Uttamarkadku Uttamar Aay - மிகவம் உத்க்ருஷ்டர்களா வாழ்ந்திருந்து (பின்பு)
உம்பரும் ஆவர்கள், Umbarum Aavarkal - நித்யஸூரிகளோடு சேர்ந்வர்களுமாவர்